Load Image
Advertisement

மணிப்பூரில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: முதல்வர் தகவல்

Manipur Violence News: 30 'terrorists' killed, several arrested, says CM N Biren Singh மணிப்பூரில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: முதல்வர் தகவல்
ADVERTISEMENT

இம்பால்: மணிப்பூரில், மக்களை தாக்கும் பயங்கரவாதிகள் 30 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் பைரோன் சிங் கூறியுள்ளார்.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்டி சமூகத்தினருக்கும், நாகா, கூகி உள்ளிட்ட பழங்குடி சமுகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்ட வந்த நிலையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இரு தரப்பினர் மோதி கொண்டுள்ளதால், பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்ய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஆய்வு செய்ய நேரில் சென்றுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், அப்பாவி மக்களுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பதிலடி மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளில் பல இடங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    சரியான நடவடிக்கை. பொதுமக்களை துன்புறுத்துவார்கள் மீது பரிதாபம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை

  • Dharmavaan - Chennai,இந்தியா

    மனித உரிமை என்று கோர்ட் முட்டுக்கட்டை போடும்

  • பாரதி -

    அருமை. முதல்வருக்கு நன்றி

  • DVRR - Kolkata,இந்தியா

    இந்த செயலால் நிச்சயம் 2 நாட்களுக்குள் மணிப்பூரில் அமைதி திரும்பும்.

  • பெரிய குத்தூசி - Chennai,இந்தியா

    தமிழகத்திலும் இதே போன்ற ஒரு பத்து நபர்களை செஞ்சிருங்க. நாடு சுபீட்சமா இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்