ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் 400 அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான அமெரிக்க பில்லியனர்கள் பட்டியலில், 23வது
ஆண்டாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், 81 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
அமேசான் சி.இ.ஓ ஜெஃப் பெஜோஸ், 67 பில்லியன் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார். பில்கேட்ஸின் நண்பரும், பங்குச்சந்தை பிதாமகனுமான வாரன் பப்பெட் , 15 ஆண்டுகளில் முதன்முறையாக 65.5 பில்லியன் சொத்து மதிப்புடன், 3வது இடம் பிடித்துள்ளார். பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க், 55.5 பில்லியன் சொத்து மதிப்புடன், முதன்முறையாக 4வது இடம் பிடித்துள்ளார்.
ஆராக்கிள் நிறுவனர் லாரி எல்லிசன், 49.3 பில்லியன் சொத்துக்களுடன் 2007ல் இருந்து தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளார். நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் மைக்கேல்
புளூம்பெர்க், 45 பில்லியன் சொத்து மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளார்.
6 பில்லியனர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் நிறுவனங்களில் 363.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளனர். இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும்
முதலீடு செய்துள்ளனர். 170 மில்லியன் மதிப்புள்ள வாஷிங்டன் மேன்சன் பில்கேட்ஸ்க்கு சொந்தமானது. அமெரிக்கா முழுவதும் பல குதிரை பண்ணைகள் மற்றும் அவரது
தனியார் முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் மூலம் சில சொகுசு ஓட்டல் பங்குகளில் அவர் முதலீடு செய்துள்ளார்.
6 பில்லியனர்கள் வசிக்கும் வீடுகள் எங்குள்ளது?
1. பில்கேட்ஸ் :
60 வயதாகும் பில்கேட்ஸ், வாஷிங்டனில் மதீனாவில் உள்ள 66 ஆயிரம் சதுரடி அடி பங்களாவில் வசித்து வருகிறார். வாஷிங்டன் ஏரி கரையில்அமைந்துள்ள இந்த பங்களாவில், உயர் தொழில்நுட்பங்களுடன் கூடியதாக மாற்ற 7 ஆண்டுகள், 63.2 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. 1988ல் 2 மில்லியனுக்கு பங்களாவை கேட்ஸ் வாங்கினார். இதன் தற்போதைய மதிப்பு 170 மில்லியன் டாலராகும்.
2. ஜெஃப் பெஜோஸ் :
52 வயதாகும் ஜெஃப் பெஜோஸ், பல ஆண்டுகளாக ஏராளமான உண்மையான சொத்துக்களை சேகரித்து, கடந்த ஆண்டு அமெரிக்காவின் மிகப்பெரிய நில உரிமையாளர்களின் தி லேண்ட் ரிப்போர்ட்டின் பட்டியலில் அவருக்கு 26வது இடத்தை பெற்று தந்தது. குடியிருப்புகளைப் பொறுத்தவரை, அவர் மேற்கு டெக்சாஸில் 165,000 ஏக்கர் பண்ணை, வாஷிங்டனில் வாட்டர் ப்ரண்டு வீடு, மன்ஹாட்டனின் செஞ்சுரி டவரில் மூன்று இணைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 12,000 சதுர அடி பெவர்லி ஹில்ஸ் எஸ்டேட் ஆகியவற்றை வைத்துள்ளார்.
அமேசான் தலைமை அலுவலகத்திற்கு அருகே வாஷிங்டனில் உள்ள மதீனாவில் உள்ள அவரது வீடு 5.35 ஏக்கர் மற்றும் சுமார் 29,00 சதுர அடி வாழ்க்கை இடத்தைக் கொண்டுள்ளது. பிரதான வீட்டைத் தவிர, வாஷிங்டன் ஏரியில் ஒரு பராமரிப்பாளரின் குடிசை, 4,500 சதுர அடி படகு இல்லமும் உள்ளது.
3. வாரன் பப்பெட் :
புத்திசாலித்தனமான பல ரியல் எஸ்டேட் முதலீடுகளை வைத்திருந்தாலும், 86 வயதான வாரன் பப்பெட் அடக்கமாக வாழ்வதற்குப் பெயர் பெற்றவர். அவரது வீடு நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் ஒரு பகுதியில் உள்ளது. 1958ல் அதனை 31,500 டாலருக்கு வாங்கிய அவர், அன்று முதல் அங்கு தான் வசித்து வருகிறார். 1921ல் கட்டப்பட்ட இந்த வீடு, பல விரிவாக்கங்களுக்கு பிறகு தற்போது 6,500 சதுர அடி வீடாக மாற்றப்பட்டுள்ளது.
4. மார்க் ஸக்கர்பெர்க்:
இளம் பணக்கார தொழில்முனைவோரான மார்க் ஸக்கர்பெர்க், தனது செல்வத்தின் பெரும்பகுதியை பள்ளிகள், சுகாதாரம் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களில் குவித்து
வருகிறார். அவரது ரியல் எஸ்டேட் முதலீட்டில், பாலோ ஆல்டோவில் உள்ள அவரது வீடு மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டோலோரஸ் பூங்காவிற்கு அருகில்
உள்ள 9.9 மில்லியன் பைட்-ஏ-டெர்ரே ஆகியவை அடங்கும்.
தனது முதல் கைவினைஞர் பாணியில் 5,000 சதுர அடியில் பாலோ ஆல்டோவில் 2011ல் 7 மில்லியன் டாலருக்கு வாங்கினார். பிரைவைசிக்காக, அடுத்த ஆண்டுகளில் தனது வீட்டைச் சுற்றியுள்ள நான்கு வீடுகளை சுமார் 43.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். ஆனால் அந்த 4வீடுகளையும் இடித்து மீண்டும் கட்டும் அவரது திட்டம் முடங்கியுள்ளது.
5. லாரி எல்லிசன் :
72 வயதாகும் ஆராக்கிள் நிர்வாக தலைவரான லாரி எல்லிசன், மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீடுகளை வைத்துள்ளார். கொண்டுள்ளார். மாலிபு மற்றும் லேக் தஹோவைச் சுற்றியுள்ள முழு சுற்றுப்புறங்களின் பெரும் பகுதிகளை வாங்கியுள்ளார். ரோட் தீவின் நியூபோர்ட்டில் 70 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீச்வுட் மாளிகையை வைத்துள்ளார்.
ஜப்பானின் கியோட்டோவில் ஒரு தோட்ட வில்லா மற்றும் ஹவாயின் 6வது பெரிய தீவான லானாயின் நிலத்தின் 98 சதவீதத்தை 2012ல் 500மில்லியன் டாலருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. கலிபோர்னியாவின் உட்சைடில் உள்ள அவரது எஸ்டேட், 110 மில்லியன் டாலர் மதிப்பீட்டில், 16ம் நூற்றாண்டின் ஜப்பானிய கட்டிடக்கலை மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மனிதனால் உருவாக்கப்பட்ட 2.3 ஏக்கர் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
6. மைக்கேல் புளூம்பெர்க் :
74 வயதாகும் நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்துள்ளார். மைக்கேல் பெரும்பாலும் தனது நேரத்தை அப்பர் எஸ்டேட் சைட் டவுன்ஹவுஸில் செலவிடுகிறார். ஆனால் அவர் நியூயார்க்கில் உள்ள ஹாம்ப்டன்களிலும், லண்டன், பெர்முடா, கொலராடோ மற்றும் புளோரிடாவிலும் தோட்டங்களை வைத்திருக்கிறார்.
மைக்கேல் ப்ளூம்பெர்க்கின் டவுன்ஹவுஸ், 17 கிழக்கு 79வது செயின்ட்ல் அமைந்துள்ளது. இது சுண்ணாம்புக் கல்லின் வெளிப்புறத்துடன் ஐந்து மாடிகளை கொண்டுள்ளது. 3 முறை மேயராக இருந்தபோது, அவர் கிரேசி மேன்ஷனுக்குப் பதிலாக டவுன்ஹவுஸில் வசித்து வந்தார். இருப்பினும், அதை மெகா மாளிகையாக மாற்றும் திட்டம் அவருக்கு இருப்பதாகத் தெரிகிறது. தி நியூயார்க் அப்சர்வர் படி, 1880ம் ஆண்டைய கிரேக்க புத்துயிர் பாணி கட்டிடத்தில் உள்ள ஆறு கட்டடங்களில், அவருக்கு ஐந்து சொந்தமானது.
66 ஆயிரம் சதுரஅடின்னா ஒரு ஊரையே விலைக்கு வங்கியிருக்கார் பில் கேட்ஸ்..