Load Image
Advertisement

மது விற்பனைக்கு டோக்கன் முறை?

சென்னை: கூடுதல் விலை முறைகேட்டை தடுக்க, ஒரு இடத்தில் 'டோக்கன்' வழங்கவும், 'டாஸ்மாக்' கடைகளில் மது பாட்டிலை விற்கவும், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
'டாஸ்மாக்' கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யு.ஆர்.கோடு குறியீடு' வாயிலாக, 'டிஜிட்டல்' முறையில் பணம் வசூலிக்க, அனைத்து கடைக்கும், விற்பனை முனைய கருவி வழங்கப்பட்டு உள்ளன. அதில் பணம் செலுத்த, வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினாலும், ஊழியர்கள் கருவியை இயக்க மறுக்கின்றனர்.

Latest Tamil News


கேரளாவில் உள்ள மதுக் கடைகளில் ஒரு கவுன்டரில் பணம் பெற்று, 'டோக்கன்' வழங்கப்படுகிறது. அந்த டோக்கனை எடுத்துச் சென்று, மற்றொரு கவுன்டரில் வழங்கினால், மது பாட்டில் தரப்படும். எனவே தமிழகத்திலும், 20 - 25 மதுக் கடைகளுக்கு பொதுவான ஒரு இடத்தில் பணம் பெற்று, 'டோக்கன்' வழங்குவது குறித்தும், அதை பயன்படுத்தி, எந்த கடையிலும் மது வாங்குவது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.
இதனால் கடைகளில் கூட்டம் இருக்காது; கூடுதல் விலைக்கு மது விற்பதும் தடுக்கப்படும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:



கேரளாவில் மதுக் கடை வாடகை, உடையும் பாட்டிலுக்கு இழப்பீட்டையும், அரசு வழங்குகிறது. இதனால் அம்மாநில ஊழியர்கள், மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பதில்லை. அதேபோல், தமிழகத்திலும் மதுக் கடை செலவினங்களை, அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


கடைகளில் விலை பட்டியல்




சென்னை, தலைமை செயலகத்தில், டாஸ்மாக் மாவட்ட, மண்டல மேலாளர்களுடன், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

செந்தில்பாலாஜி பேசியதாவது: மதுபானங்களின் விலை பட்டியல், அனைத்து வாடிக்கையாளருக்கும் தெளிவாக தெரியும்படி, மதுபான கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும். இதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.மதுக் கடைகளை தவிர, மற்ற இடங்களில் மதுபானம் விற்கப்படும் இடங்களை கண்டறிந்து, போலீசாருக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (12)

  • Chandrasekaran - Chennai ,இந்தியா

    இன்னுமா அமைச்சர் நீட்டிக்கின்றார்.

  • N SASIKUMAR YADHAV -

    இப்போது கரூர் கோஷ்டி டோக்கன் கொடுப்பதிலும் பணம் பார்த்துவிடும்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பாவம், இப்போதுதான் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று தெரிகிறது அமைச்சருக்கு எல்லாரும் நம்புங்கள்

  • Kuppuswamy India -

    மது கடை என்பதை விட விதவைகள் உற்பத்தி மையம், பொருளாதாரத்தை ஒழிக்கும் மையம் என்று பெயர் மாற்றம் செய்து விடவும்.....பொருத்தமாக இருக்கும்..... கேவலமான துறைக்கு ஓர் அமைச்சன்......

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    டாஸ்மாக் சரக்குகளை திறமையாக குடிமக்களுக்கு விநியோகிக்க டாஸ்மாக் அதிகாரிகள் Amazon, Flipkart, Zomoto, Swiggy போன்றவர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டால் வியாபாரம் மற்றும் வருமானம் மிக ஜோராக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்