பார்லிமென்ட் கூட்டு அமர்வில் 1272 உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. லோக்சபாவின் வடிவமைப்பு தேசிய பறவையான மயில் மற்றும் ராஜ்யசபாவின் வடிவமைப்பு தேசிய மலர் தாமரையின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்நிலையில், புதிய பார்லிமென்ட் திறப்பு விழா நிகழ்ச்சிகள், இன்று(மே 28) காலை 7:30 மணிக்கு பார்லிமென்ட வளாகத்திற்கு வெளியே காந்தி சிலை அருகே ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.
நிகழ்ச்சியில் போது, ஆதினங்கள் பிரதமர் மோடியிடம் தமிழக செங்கோலை கொடுத்தனர். இதையடுத்து பிரதமர் மோடி செங்கோல் முன் தலை வணங்கினார். பூஜையின் போது, ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
முன்னதாக பிரதமர் மோடி பார்லிமென்ட் வளாகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினத்தால் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட செங்கோலை, பிரதமர் மோடி காலை 8.30 மணிக்கு மேல் லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார்.
புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து மத பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது, ஹிந்து, கிறிஸ்டின், இஸ்லாம், புத்தம் சீக்கியம், உள்ளிட்ட 12 மத தலைவர்கள் தங்கள் வழிபடும் கடவுளை நினைத்து அவரவர் பாணியில் சிறப்பு வழிப்பாடு நடத்தினர். விழாவில் தமிழக தேவார பாடல்கள் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது.இதனை பிரதமர் ரசித்து கேட்டார், கலைஞர்களையும் பாராட்டினார்.
ஆதினாகர்தர்கள் ....சங்கராச்சாரியார்கள் .....மடாதிபதிகள் ... இந்து மக்களிடம் பிரசாரம் செய்ய தொடங்க வேண்டும் ....யார் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்..... இந்து விரோத திமுக மற்றும் அதன் அல்லக்கைகள் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டும்.