Load Image
Advertisement

*மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை: குறைவான சப்ளையால் தவிக்கும் மக்கள்

*Drinking water scarcity in the district: People suffering due to less supply   *மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை: குறைவான சப்ளையால் தவிக்கும் மக்கள்
ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்தூர்,-மாவட்டத்தில் போதிய மழை இல்லாததாலும், குடிநீர் ஆதாரங்கள் வறண்டு வருவதாலும், தாமிரபரணி தண்ணீர் வரத்து குறைந்துள்ளதாலும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் விநியோக நாட்கள் தள்ளிப் போவது, அதிகரிப்பதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு ஆளாகும்நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி சீராக குடிநீர் சப்ளை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 5 நகராட்சியும், சிவகாசி மாநகராட்சி

9 பேரூராட்சி, 11 ஊராட்சி ஒன்றியங்கள் 450 ஊராட்சிகள் உள்ளது. இவற்றில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீர் ஆதாரங்களின் மூலமும், மற்ற நகரங்களில் உள்ளூர் நீராதங்கள் மூலமும், குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தாமிரபரணி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய கோடையினால் போதிய மழை இல்லாததால் தாமிரபரணி உற்பத்தியாகும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளுக்கும், தினசரி தரவேண்டிய தண்ணீரின் அளவு பாதிக்கு பாதி குறைந்துள்ளது.

மாவட்டத்தில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, சாஸ்தா கோயில் நீர் தேக்கங்களிலும் போதிய தண்ணீர் இல்லை. பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு கிடக்கிறது. போர்வெல்களிலும் தண்ணீரின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தினசரி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு தாமிரபரணி மூலம் போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாததால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும் குடிநீர் சப்ளை நாட்கள் அதிகரித்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நாட்கள் படிப்படியாக அதிகரித்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.

ஏராளமான வீடுகளில் மினரல் வாட்டர் கேன்கள் வாங்கியும், தனியார் வேன்களில் கொண்டு வரப்படும் மினரல் வாட்டரை குடம் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கியும் மக்கள் தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலை மாவட்டத்தில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் காணப்படுகிறது. மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்க முடியாத நிலை உருவாகி வருகிறது.

எனவே, மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பிலும் சீரான நாட்களில் குடிநீர் சப்ளை நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். குழாய்கள் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்க உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • veeramani - karaikudi,இந்தியா

    விருதுநகர் மாவட்டம் .. தண்ணீர் மிக அதிகம் பற்றாக்குறையாக மாவட்டம். மழை தண்ணீரை விஞ்ஞான முறைப்படி சேமிக்க இவர்களுக்கு தெரியவில்லை. பிளவக்கல் அணை ஒன்று போதும் தண்ணீர் தேவையை சமாளிக்க. அனால் மாவட்ட நிர்வாகம் தகுதியான தண்ணீர் மேலாண்மை பொறியாளர்கள் இல்லாததால் வெயில் காலத்தில் தடுமாறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement