மீண்டும் பிரதமராக மோடிக்கு 48% சதவீத மக்கள் ஆதரவு: கருத்துக் கணிப்பில் தகவல்

வரும் 2024ல் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அதன் விபரம்:
48 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றும், 18 சதவீதம் பேர் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4.96 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்றொரு கருத்துக் கணிப்பில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62.05 சதவீதமாகவும், 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 82.96 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (11)
தமிழனை வேறு மாநிலத்தவர் நம் இந்திய தேசத்தின் பிரதமர் அரசியல் தாண்டி இந்தியா வில் மற்றும் வேறு நாடுகள் எங்கு சென்றாலும் தமிழ் நாட்டின் பெருமையை உலகுக்கு பெருமையா சொல்லி வருகிறார். உண்மையில் அரசியல் பார்வையில் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினை அவருக்கு நன்கு தெரிந்தும், மோடி ஜி வை ஒரு மொழி பிரச்சனைக்காக ...தரம் தாழ்ந்து பேசி வருகிறார்கள் என்று தெரிந்தும்....எல்லாவற்றையும் மறந்து மன்னித்து பெருதன்மைய....தமிழ் மொழி பற்றி மற்றும் இந்தியாவில் தமிழர்கள் பங்களிப்பை ஒரு தனி மனிதனாக பெருமை படுத்துவதை.....நாம் ஏற்று கொள்ளவில்லை ஏற்றால். நாம் உண்மையில் ....மனித பிறவியா என்று...நாம் நம்மை கேட்டு கொள்ள வேண்டும். ஆன்மிகத் கடந்து ...உண்மையான மனித குல வரலாறு எல்லோருக்கும் தெரிந்தும்....நாம் மத, மொழி அடிப்படையில் வேற்றுமையை உருவாக்கி.....தெரு நாய்கள் போல் சண்டை போடுவது....உண்மையில்...அசிங்கமா இல்லை.உண்மையில் நாம் இங்கு நரேந்திர மோடி அவர்களுக்கு நாம் நிறைய கடமை பட்டு இருக்கிறோம் ...உலக மத்தியில் இன்று இந்தியாவில் பொருளாதர நிலையை பார்த்து மற்ற எல்லா நாடுகளும் வியந்து பார்க்கிறது.....இது நமக்கு மோடி ஜி வினால் கிடைத்த பெருமை அல்லவா.... உண்மையை ஏற்றுக் கொண்டு.....மனம் மாற்றி.....நமது இந்தியாவின் பிரதமரை பாராட்டுவோம்....பெருமை கொள்வோம். அஜய் காரைக்குடி.
இன்று ஆனந்தா விகடன் சர்வே வந்து உள்ளது அதில் தெரிகிறது .மோடிக்கு எவ்வளவு எதிர்ப்பு என்று
குஜராத், உபியில் மட்டும்தான் கருத்தேடுப்பு நடத்தினார்களா??? கருத்தெடுப்பு நடத்திய நிறுவனங்கள் எப்படிப்பட்டது என்று நாடே அறியும்...சரிசரி இத நெனச்சு கொஞ்சம் மனச தேத்திக்குங்க...
இதை நாங்க நம்பவே மாட்டோம். இவங்கள்ளாம் பெரிய ஆள்
அயல்நாட்டு ரத்தம் ஓடும் ஒரு மனிதனுக்கும் இந்திய ரத்தம் ஓடும் மனிதனுக்குமானா போராட்டம் தான் தேர்தல் இதில் மக்கள் புத்தி சாலிகளா ஏமாற்று வ்ரதைகள்ல மதி மயங்க வைத்து ஓட்டைய்ய திருடும் கும்பலுக்கா தங்கள் ஆதராவா என்பது தான் கேள்வி