ADVERTISEMENT
சென்னை: நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் இளம் விளையாட்டு வீரர்களும், தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த இந்த விளையாட்டுகள் உதவும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அனைவரும் கண்டது போல், தமிழக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தகுந்த கம்பீரத்துடன் நடத்தி, தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!