பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி தமிழகத்தில் 3 கல்லூரிகளுக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடிதம்
இதன் மூலம், தலா 500 எம்.பி.பி.எஸ்., இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கல்லூரி திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இதனை எதிர்த்து, தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டு உள்ளது.
பாகுபாடு
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மிகப் பழமை வாய்ந்த மருத்துவமனைகளாகும். திருச்சி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மிகச் சிறப்பான பணியினை ஆற்றிக் கொண்டு உள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணையம் சிறிய குறைகறான சிசிடிவி கேமராக்கள் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை என்ற குறை சொல்லி உள்ளனர். இந்த குறைகளையும், பழுதடைந்த சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரி செய்து விடுவோம்.
ஆனால், இதற்கு மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளை சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கிறது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு வருவதாலும், அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தில் .ள்ள மருத்துவ கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணி வலியுறுத்தல்
பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை கடுமையானது. அளவுக்கு அதிகமானது. தேவையற்றது. தமிழகத்தின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயம் அல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். 3 மருத்துவக் கல்லூரிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள குறைகளை உடனடியாக சரி செய்து இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (18)
Education is going bad to worst after this thvidiya arasu came to power. May be as nehru said once that they may be allowing students and teachers to manipulate
திராவிட மாடல் அரசு தான் எண்ணியதை இரண்டே ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டது....
முன்பே எச்சரித்தும் குறைகளைக் களையவில்லை. இப்போ நடவடிக்கை எடுத்தவுடன் மத்திய அரசைக் குறை கூறுவது சரியா?
திராவிட மாடல் அரசின் மற்றொரு அவலம்.. நம்ம திராவிட CM எங்கே போய் அவர் முகத்தை வைத்துக் கொள்வார்
டி ம் கே கல்வி (கொள்ளை) தந்தையர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் கொள்ளை அடிக்கத்தான் இப்படி பட்ட சின்ன சின்ன பிரச்சனைகளை கூட திருட்டு திராவிட அரசு சரி செய்யவில்லை. இப்போது பலி மத்திய அரசு மீது, பண கொள்ளை திருட்டு திராவிட கொத்தடிமைகளுக்கு.