Load Image
Advertisement

தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனங்களில் மின்சக்தி படிப்புகள்

என்.பி.டி.ஐ., எனும் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனங்களில் பல்வேறு போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்: பி.ஜி.டி.சி., - பவர்பிளான்ட் இன்ஜினியரிங்.

பி.ஜி.டி.சி., - பவர் சிஸ்டம் ஆப்ரேஷன்.

பி.ஜி.டி.சி., - ரினீவபிள் எனர்ஜி மற்றும் கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜிஸ்.

பி.ஜி.டி.சி., - ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜிஸ்.

பயிற்சி நிறுவன வளாகங்கள்: பரிதாபாத், புதுடில்லி, நாக்பூர், பெங்களூரு, நெய்வேலி, ஆலப்புழா, ஷிவ்புரி ஆகிய நகரங்களில் என்.பி.டி.ஐ., வளாகங்கள் உள்ளன. நெய்வேலி பயிற்சி நிறுவனத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் இன் பவர் பிளான்ட் இன்ஜினியரிங் படிப்பு மட்டும் வழங்கப்படுகிறது. இங்கு மொத்தம் 60 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி அண்டு ஐ., பவர் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.டெக்., அல்லது பி.இ., அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விபரங்களுக்கு: https://npti.gov.in/


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement