Load Image
Advertisement

விமானத்தின் அவசர கதவை திறந்த பயணியால் பரபரப்பு

ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் தரையிறங்குகையில், அதில் இருந்த பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவை திறந்ததால் மற்ற பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், 200 பயணியருடன் கிழக்காசிய நாடான தென் கொரியாவின் தேகு சர்வதேச விமான நிலையத்துக்கு சமீபத்தில் வந்தது.

வானில் 650 அடி உயரத்தில் விமானம் பறந்த போது, அதில் இருந்த பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை திறந்தார். இதனால், விமானத்தின் உள்ளே பலத்த காற்று வீசியது.

இதையடுத்து, விமானத்தில் இருந்த மற்ற பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் பயத்தில் கூக்குரலிட்டு அலறினர். எதிர்பாராதவிதமாக விமானத்தின் உள்ளே வீசிய பலத்த காற்றால், ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தேகுவில் விமானம் தரையிறங்கியவுடன், பாதிக்கப்பட்ட பயணியர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுவாசிக்க சிரமப்பட்ட ஒன்பது பயணியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விமானத்தின் அவசர கதவை திறந்த நபரிடம், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement