Load Image
Advertisement

வருமான வரி சோதனை எதிர்பார்த்த ஒன்று தான் - அண்ணாமலை

''அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில், வருமான வரி சோதனை எதிர்பார்த்த ஒன்று தான்; இதில் எந்த ஆச்சரியமும் இல்லை,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் இவர் கூறியதாவது:

இன்று (நேற்று) நடந்த சோதனை எதிர்பார்த்தது தான். தப்பு செய்திருந்தால், இதுபோன்ற சோதனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். புதிய பாராளுமன்ற கட்டடத்துக்கு, செங்கோல் செல்ல இருக்கிறது. இது, தமிழர்களுக்கு தான் பெருமை. ஆனால், எதிர்கட்சிகள் இதிலும் அரசியல் செய்கின்றன.

ஆர்.எஸ்., பாரதிக்கு 'அண்ணாமலை ஜுரம்' வந்துவிட்டது. எது நடத்தாலும் அண்ணாமலை தான் காரணம் என்று கூறி வருகிறார். வருமான வரி சோதனைக்கு, அண்ணாமலை எப்படி காரணமாக முடியும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள், வெளிநாடுகள் செல்வது தவறல்ல. ஆனால், அங்கு சென்று திரும்பும் போது, மாநிலத்துக்காக என்ன கொண்டு வருகின்றனர் என்பது முக்கியம். முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, தமிழக வளர்ச்சிக்கு என்ன கொண்டு வந்தார்கள், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கின்றார்கள் என, தி.மு.க., வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகமே குடிக்கு அடிமையாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 15 ஆண்டுகளில் தமிழகம், சாராய நாடாக மாறிவிடும். 'தி.மு.க., பைல்ஸ் 1' போல, அரசியல் ஊழல்கள் குறித்து 'தி.மு.க., பைல்ஸ் 2' ஜூலை முதல் வாரத்தில் கோவையில் வெளியிடப்படும்.

அப்போது, இவர்களின் ஊழல் பட்டியல், மக்களுக்கு தெளிவாக தெரிந்து விடும். ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை என சொல்லிக்கொண்டு இருப்பவர்களின் உண்மை வெளிவரும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement