வெறும் கையில் முழம் போடும் ஆவின்: அமுலை எதிர்ப்பதால் நுகர்வோர் அதிருப்தி
பால் பொருட்களை உற்பத்தி செய்யாமல், 'அமுல்' நிறுவனத்தை கண்டு, ஆவின் நிறுவனம் அஞ்சுவது, நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் வாயிலாக நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சென்னையில், 14.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில், 13 லட்சம் லிட்டர் விற்பனையானது. எஞ்சிய பாலில், பால் பவுடர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட மதிப்புகூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
அதிகளவில் பால் பவுடர், வெண்ணெய் தேக்கம் அடைந்ததால், அவை குறைந்த விலையில், 2021 - 22ம் ஆண்டு, மொத்தமாக விற்பனை செய்யப்பட்டன.
தற்போது, படிப்படியாக பால் கொள்முதல் குறைந்து வருகிறது. நாள்தோறும் 29 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் எருமை பாலுக்கு 41 ரூபாய், பசும்பாலுக்கு 35 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள், அதிக விலை தருகின்றன. இது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கின்றன. எனவே, ஆவினுக்கு மாற்றாக, தனியாருக்கு பால் வழங்குவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான 'அமுல்' தமிழகத்தில் பால் விற்பனையை துவங்க உள்ளது. இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் பால் பொருட்கள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக, பால் கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இது, ஆவின் நிர்வாகத்தின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அமுல் நிறுவனத்தின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் 1 கோடி லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி நடந்து வருகிறது. இதில், 29 லட்சம் லிட்டர் பால் மட்டுமே, ஆவின் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகிறது. எஞ்சிய பாலை, தனியார் நிறுவனங்கள் தான் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன.
ஆவின் நிறுவனம், குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்வதால், பால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. சமையல் வெண்ணெய், நெய், பால் பவுடர் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நீடிக்கிறது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2022ம் ஆண்டு ஜன., மாதம், பால் புரத நுாடுல்ஸ், 'ரெடிமேட்' பாயாச மிக்ஸ், 'டெய்ரி ஒயிட்னர்' உள்ளிட்ட பொருட்களை, முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
பால் வளத் துறை அமைச்சராக இருந்த நாசர், அதே ஆண்டு ஆக., மாதம் 'கோல்ட் காபி, வெண்ணெய் கட்டி, பாஸந்தி, 'பேக்டு யோகர்ட்' உள்ளிட்ட 10 பொருட்களை அறிமுகம் செய்தார். இதில் பெரும்பாலான பொருட்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
நுகர்வோரின் தேவைகளை, ஆவினுக்கு மாற்றாக, அமுல் தான் அதிகளவில் பூர்த்தி செய்கிறது. ஆவினில் குழந்தைகளுக்கான பால் பவுடர் உற்பத்தி இல்லாததால், அமுல் பால் பவுடரை, நுகர்வோர் வாங்குகின்றனர். 'பேக்கரி'களின் தேவைகளுக்கு சமையல் வெண்ணெய், பாலாடை கட்டி ஆகியவற்றை,, அமுல் மட்டுமே தட்டுபாடின்றி வழங்கி வருகிறது.
ஆவின் நிறுவனம், 500 மி.லி., 34 ரூபாய்க்கு விற்பனை செய்யும் 6.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பாலை, அமுல் நிறுவனம், 30 ரூபாய்க்கு விற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆவின் பால் விற்பனை படுத்து விடும்; பால் பொருட்கள் உற்பத்தியும் குறைந்து விடும்.
பால் மற்றும் பால் பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஆர்வம் காட்டாமல், அமுல் நிறுவனத்தை கண்டு, ஆவின் நிறுவனம் அஞ்சுவது, நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர்கள் மைய தலைவர் சடகோபன் கூறியதாவது:
ஆவின் தயாரிக்கும் பால் பொருட்கள், பல இடங்களில் கிடைப்பது இல்லை. இதனால், மற்றொரு கூட்டுறவு நிறுவனமான அமுல் பொருட்களை நம்பி, மக்கள் வாங்குகின்றனர். போட்டி இருந்தால் மட்டுமே, தரமான பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.
எனவே, அமுல் பால் விற்பனையை, அரசு வாயிலாக கட்டுப்படுத்த நினைக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை முற்றிலும் தவறானது. அமுலை போல, ஆவின் நிறுவனம் பால் பொருட்களை அதிகளவில் தயாரித்து, நாடு முழுதும் விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!