Load Image
Advertisement

யார் இந்த சுப்மேன் கில்? சமூக வலைதளங்களில் இன்று..!

Who is this Subman Gill? Today on social media..!   யார் இந்த சுப்மேன் கில்? சமூக வலைதளங்களில் இன்று..!
ADVERTISEMENT
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. நாளை சிஎஸ்கே-ஜிடி அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. குஜராத் அணியின் தூண்களுள் ஒருவராக விளங்கும் சுப்மன் கில் (24) தற்போது டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வருகிறார். யார் இந்த கில் எனத் தெரிந்துகொள்வோம்.

பஞ்சாப் மாநிலம் ஃபஜீகா நகரில் 1999 ஆம் ஆண்டு செப்.,8 ஆம் தேதி சுப்மேன் கில் ஜாத் சமூகக் குடும்பத்தில் பிறந்தார். விவசாயியான அவரது தந்தை லக்விந்தர் சிங், இந்துப் பெண்ணை காதலித்து மணந்தார். சிறுவயது முதலே கிரிக்கெட் வீரர் ஆகும் கனவு கொண்ட லக்விந்தர் சிங்கின் கனவு நனவாகவில்லை. எனவே தனது மகன் கில்-ஐ கிரிக்கெட் வீரர் ஆக்க தீவிரப் பயிற்சி அளித்தார்.

தனது மகனுக்கு தனது விவசாய நிலத்தில் பேட்டிங் பயிற்சி அளித்தார் சிங். மிக இளவயதில் கில் திறம்பட பேட்டிங் செய்ததைக் கண்டு அவரது எதிர்காலத்தைத் திட்டமிட்டார் லக்விந்தர் சிங். இதனையடுத்து மொஹாலி பிசிஏ மைதானத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்க வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார் சிங்.
Latest Tamil News
மூன்று வயது குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்க, குழந்தை கில் பேட் பிடித்து கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார். கிரிக்கெட் மீதிருந்த அதீத காதலால் தூங்கும்போதுகூட கிரிக்கெட் பேட்டை கட்டிக்கொண்டு தூங்குவாராம் கில். பஞ்சாப் விஜய் மெர்சண்ட் கோப்பைக்கான 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான போட்டியில் கலந்துகொண்ட கில், இரட்டை சதம் விளாசினார். பதின்பருவ சிறுவன் ஒருவன் இப்படி இரட்டை சதம் அடித்தது அப்போது பலரை வியக்க வைத்தது.

பஞ்சாப் மாநில கிரிக்கெட் அணி வரலாற்றில் 587 ரன் குவித்த சிறார் கிரிக்கெட் வீரர் என்றால் அது கில் மட்டும்தான். இவரது அபார பேட்டிங் திறன் மற்றும் கன்சிஸ்டன்ஸியைக் கண்டு இவர் குஜராத் டைகர்ஸ் அணியால் இந்த சீசனில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

விராட் கோஹ்லியை தனது விளையாட்டு முன்மாதிரியாகக் கொண்டுள்ள கில், அவரது ஆர்சிபி அணியையே வீழ்த்தி சதம் அடித்து குருவை மிஞ்சிய சிஷ்யனாகி சாதனை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் மகளும் பிரபல மாடலுமான சாராவுடன் கில் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் செய்திகள் தற்போது உலா வருகின்றன.

இதுதொடர்பான மீம்களும் தற்போது அதிகரிக்க, கில் இந்த சீசனில் மூன்று சதங்களைக் குவிக்க, தற்போது கில்தான் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக உலா வந்து கொண்டிருக்கிறார். நாளை நடைபெறும் குஜராத்- சென்னை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில் கில் இந்த சீசனில் நான்காவது சதம் அடிப்பாரா என அவரது ரசிகர்கள் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின், தோனி, கோஹ்லி என்கிற வரிசையில் எதிர்காலத்தில் பேட்டிங்கில் கில் இடம்பிடிப்பார் என இப்போதே நெட்டிசன்கள் பலர் அடித்துக் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • Kanagaraj M - Pune,இந்தியா

    மூன்று வயது மூத்தவரார்....

  • Fastrack - Redmond,இந்தியா

    சச்சினுக்கு மருமகனாக உருவெடுப்பார் என்று நிறைய செய்திகள் .. அம்மணிக்கு இவரை விட மூணு வயசு ஜாஸ்தி ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement