Load Image
Advertisement

மதுரையில் குடிநீர் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் நேரு

மதுரை: மதுரையில் வைகை ஆற்றங்கரையின் மேம்படுத்தும் பணி,
ஓபுளா படித் துறையில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம்,
தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அலங்காநல்லூர், வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், சேடப்பட்டி, கல்லுப்பட்டி, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் 3 கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், உசிலம்பட்டி நகராட்சிக்கான பிரத்யேக குடிநீர் திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

வணிகவரி அமைச்சர் மூர்த்தி, ஐ.டி. அமைச்சர் தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டனர்.
அமைச்சர் நேரு பேசுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2008 கோடி அளவிற்கு மதுரைக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்சியை விட மதுரைக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளோம்'' என்றார்.

குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் முத்துராமன், அரசு கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மினா, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மேயர் இந்திராணி பொன் வசந்த், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement