ADVERTISEMENT
நமது சிறப்பு நிருபர்
இதனால் கலெக்டர் வினீத், உதவி இயக்குனர் வள்ளலை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தார். இந்த மாற்றத்திற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தற்போது திருப்பூர் கலெக்டர் வினீத் தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே கனிமவளத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் விடுத்துள்ள உத்தரவில், கனிமவளத்துறை உதவி இயக்குனரை துறையின் கமிஷனரால் மட்டுமே மாற்ற முடியும். எனவே வள்ளலை விடுவித்த கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அவர் மீண்டும் திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறையில் உதவி இயக்குனராக நியமிப்பதாக உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கனிமவளத்துறையினர் கூறுகையில், கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு துறையில் நடக்கும் மாற்றங்கள் அவருக்கு தெரிவதில்லை. அவர் நாளிதழ்கள் உட்பட எந்த தகவலையும் அறிவதில்லை. அதிகாரிகள் கொண்டு தரும் தினசரி பேப்பர் கட்டிங்களை மட்டுமே வாசிக்கிறார்.
துறைக்கு எதிரான, விமர்சிக்கும் செய்திகளை அவர் கண்ணில் காண்பிப்பதில்லை. தற்போது பவர்புல்லாக இருக்கும் கனிமவளத்துறை கமிஷனர் ஜெயகாந்தன், வள்ளலை மீண்டும் அதே பணியிடத்தில் அமர்த்தி உத்திரவிட்டார். எனவே எவ்வளவு ஊழல் முறைகேடு புகார்கள் இருந்தாலும் உயர் அதிகாரிகள் நினைத்தால் எதுவும் செய்யலாம் என்பது கனிமவளத் துறையில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
வாசகர் கருத்து (22)
இந்த ஆட்"சீ"யில் நேர்மையை எதிர்பார்க்க முடியாது
,லஞ்சத்திலேயே ஊறிட்டாய்ங்க, காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
யோவ் என்ன மாடல் சார் உங்களது ஆட்சி , கேடுகெட்ட மாடல் என்றும் பெருமையோடு கூறலாம்
பல்லடம் பகுதி மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுநாங்க , இப்போ என்னத்த சொல்ல . திராவிட ஆட்சியில் எல்லாம் நடக்கும், மக்கள் தான் அடுத்தமுறை இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சைலேந்திரபாபு அண்ணா இந்த கலெக்டருக்கு புத்திமதி சொல்லி ஒரு வீடியோ போடுங்கண்ணா.