Load Image
Advertisement

ரூ.8438 கோடி நிதி மோசடியில் வி.சி., மாநில நிர்வாகி கைது

 VC, state administrator arrested in Rs 8438 crore financial fraud    ரூ.8438 கோடி நிதி மோசடியில்  வி.சி., மாநில நிர்வாகி கைது
ADVERTISEMENT
ரூ.8438 கோடி நிதி நிறுவன மோசடி புகாரில் வி.சி., மாநில நிர்வாகியும், திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில், எல்பின் நிதி நிறுவனம் செயல்பட்டது.

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. ஆனால் கூறியபடி, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்தது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டு, எல்பின் நிறுவன மோசடி வழக்கு விசாரிக்கப்படுகிறது. ரூ.8438 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய குற்றவாளியான ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்த வி.சி., தொழிலாளர் முன்னணி மாநில துணை செயலரும், திருச்சி மாநகராட்சி, 17வது வார்டு கவுன்சிலருமான பிரபாகரன், 45, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement