மணிப்பூரில் மீண்டும் தீவிரமடைந்த கலவரம்: மேலும் 5 நாள் இணைய சேவை முடக்கம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மோதல் காரணமாக ஏற்பட்ட வன்முறையில், இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பாஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள மெய்டி சமூகத்தினருக்கும், 40 சதவீதம் உள்ள நாகா, கூகி உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மீண்டும் இருதரப்பினர் இடையேயான மோதல் தலை தூக்கியுள்ளது. இந்த வன்முறை காரணமாக, இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கி வருகிறது.
அதன் படி, வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று (மே27) 24வது நாளாக மாநிலத்தில் இணைய சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே இன்று(மே 27) மணிப்பூர் செல்கிறார். அப்போது, அங்குள்ள மக்களுக்கு ராணுவ படையினர் அளிக்கும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அவர் தற்போது நிலவி வரும் வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (14)
ஆறு ஆண்டுகளாகக் கலவரமில்லாமலிருந்த நிலையில், மெய்ட்டி இனமக்களும் பழங்குடியினர் என்று ஐகோர்ட்டு கொடுத்த தீர்ப்பால் இன்று கலவரம். கோர்ட்டுகள் நாட்டாமை செய்வதால் பலபிரச்னைகள் ஏற்படுகின்றன. காங்கிரசு மற்றும் மிஷநரிகளின் பங்கும் ஆராயவேண்டும்..
பேசாம நாம யோகி யை அங்கே முதல் அமைச்சராக போட்ட என்ன இல்லாட்டி மணிப்பூரு வேண்டாம் ....நாம ஒரு மாநிலத்திய லீசுக்கு விட்ட பெருமை வரலாற்றில் கிடைக்கும்
மணிப்பூர் கலவரம் இதுக்கு முக்கிய காரணம் யாரு ? எல்லாம் பிஜேபியின் வேலை தான் அதை மட்டும் மூடி மறைத்து விடுவார்கள்
மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் திருச்சபையை சேர்ந்தவன் உறையலாம் சொத்துக்கள் வாங்கலாம் ...ஆனால் அதே மாநிலத்தில் மெய்டி இன மக்கள் மலை பிரதேச மாவட்டங்களில் சொத்துக்கள் வாங்க முடியாது ....இது என்னய்யா காங்கிரஸ் சட்டம் ??....
மணிப்பூரா? மிகவும் முன்னேறிய ,வடகிழக்கு மாநிலமாச்சே...சும்மா ஹோலி கொண்டாடியிருப்பாங்க.