ADVERTISEMENT
திருச்சி, பெரம்பலுார், புதுக்கோட்டை, கரூர், சிவங்கை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், 30 சட்டசபை தொகுதிகளில் வெற்றி,- தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக, முத்தரையர் சமுதாயம் உள்ளது.
கடந்த 1977 முதல் முத்தரையர் சமுதாய மக்கள், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக உள்ளனர். தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில், அ.தி.மு.க., அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற்றதற்கு, முத்தரையர் ஆதரவே காரணம்.
திருச்சி நகர பகுதிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற தி.மு.க.,வால், முசிறி, மணச்சநல்லூர், துறையூர், குளித்தலை போன்ற கிராமப்புற தொகுதிகளில், அபூர்வமாகவே வெற்றி பெற முடிந்தது. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சரான நேரு, தன் சொந்த தொகுதியான லால்குடியில் போட்டியிட்டு வந்தார். ஆனால், முத்தரையர் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு சென்றதால், 1996, 2001-ல் தோல்வி அடைந்தார். இதனால், 2006 முதல் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.
திருச்சியில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்தாலும் நேருவால், அ.தி.மு.க.,விடம்இருந்து, முத்தரையர் ஓட்டுகளை தி.மு.க.,வுக்கு கொண்டு வர முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின் நிலைமை மாறியுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 75 இடங்களில் வென்றாலும், முத்தரையர் ஓட்டு வங்கி உள்ள மாவட்டங்களில், ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இந்நிலையில், பெரம்பலுார் லோக்சபா தேர்தலில், தன் மகன் அருணை நிறுத்த, அமைச்சர் நேரு திட்டமிட்டுள்ளார். கடந்த முறை தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், இப்போது கூட்டணியில் இல்லை. இதனால், நேருவின் மகன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் உள்ள மணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர், குளித்தலை ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளிலும், முத்தரையர் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. எனவே, முத்தரையர் ஓட்டுகளை பெறுவதற்காக, அச்சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை, நேரு சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க., சார்பில் முத்தரையர் வேட்பாளர் தான் நிறுத்தப்படுவார் என்பதால், அவரை எதிர்கொண்டு, மகனை வெற்றி பெற வைக்க, இப்போதே களமிறங்கி விட்டதாக, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (24)
திமுகவினரின் வாரிசு அரசியல் ஏன். சுருட்டிய சொத்துக்களை வேற யாரையும் நம்பி தர முடியாது.
அப்போ சாமானியர்களுக்கு திமுகவில் ? வேண்டுமானால் அந்த தொண்டர்களுக்கு ஒரு ஹலா சர்டிபிகேட் கொடுத்திடலாம்
இந்த கட்சியின் என்றைக்கு தமிழகத்தை விட்டு ஒழியும்.
..... நிமிர்ந்து நிற்க பார்க்கவும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கரும்பு திண்ணக் கூலியா ...???