ADVERTISEMENT
திருப்பூர்: 'செங்கோலில் நந்தி சின்னம் உள்ளதால், புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறும் திருமாவளவன், நந்தியை வழிபடுவோர் ஓட்டு வேண்டாம் என கூறுவாரா?' என, ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
செங்கோலில் நந்தி உருவம் இடம் பெற்றுள்ளதால், புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, வி.சி., - எம்.பி., திருமாவளவன் கூறியுள்ளார். 'தமிழர்கள், ஹிந்துக்கள் அல்ல; சைவர்கள்' என சமீபத்தில், திருமாவளவன் பேசினார். நந்தி, சைவ சமயம் சார்ந்தது தானே!
சைவத்தின் தலைமை பீடமாக விளங்கும் சிதம்பரம் சிவாலயம் அமைந்துள்ள தொகுதியில் தான் அவர் எம்.பி., யாக வெற்றி பெற்றுள்ளார். அவ்வகையில் தன் தொகுதியின் பிரதான அடையாளமான நந்தியை இவர் தான் உயர்த்தி பிடிக்க வேண்டும்; சொந்தம் கொண்டாட வேண்டும்.

அவர் மட்டுமல்ல; யார் புறக்கணித்தாலும், இந்த மண்ணின் புராதன அடையாளமான நந்தியம் பெருமான் எப்போதும் பார்லிமென்டில் வீற்றிருக்க போகிறார். அப்படியெனில், திருமாவளவன் சபைக்கு போக மாட்டாரா, பதவியை எப்போது ராஜினாமா செய்யப் போகிறார் என்று கேள்வி எழுகிறது.
நந்தியை வழிபடும் பக்தர்களின் ஓட்டு வேண்டாம் என்று கூற அவருக்கு தைரியம் உள்ளதா? இவரை சிதம்பரம் தொகுதி மக்கள் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (29)
இவன் கிருஸ்தவ மூர்க்க கூட்டத்தின் கைக்கூலி இவனுக்கு ஓட்டு போடுபவர்களை உதைக்கணும்
அடுத்த தேர்தலில் இந்த ஆளுக்கு யாரும் வோட்டு போட வேண்டாம். எதற்கெடுத்தாலும் வக்கர பேச்சுதான் இநத ஆளுக்கு .
அப்போ இந்த எச்சிலை எங்க நின்றாலும் மானம் ரோஷம் உள்ள இந்துக்களே ஓட்டு போட வேண்டாம். பாவம் ஜெயித்தால் கூட அங்கு நந்தி செங்கோல் இருப்பதால் எப்படியும் போகமாட்டான் அதனால் ஏன் இவனை தேர்ந்தெடுக்க வேண்டும்
அவருக்கு நந்தி வேண்டாம். தத்தி யே போதும்🙄.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இவன் ஒரு கைக்கூலி நந்தி உள்ளதால் பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு போகமாட்டான், இவன் போகலைனா பாராளுமன்றம் திறக்கப்படாதா? பிரியாணி கஞ்சி குடிக்க கூப்பிடிருந்தால் இந்நேரம் ரயில் ஏறி போயிருந்திருப்பான். தவறு வேறெங்குமில்லை நமது மக்களுக்கு என்றைக்குமே புத்தியே வராது. மக்களுக்கு என்றைக்கு புத்தி தெளியுதோ அன்றைக்கு இந்த மாதிரி ஆட்கள் எல்லோரும் காணாமல் போவது நிச்சயம்.