Load Image
Advertisement

மாத கணக்கில் காத்திருக்கும் மாணவர்கள்: பணியில் சேர்க்காத அமேசான் இந்தியா

Students waiting for months: Amazon India not hiring   மாத கணக்கில் காத்திருக்கும் மாணவர்கள்: பணியில் சேர்க்காத அமேசான் இந்தியா
ADVERTISEMENT

புதுடில்லி: மிகப் பெரும் உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து, பணிக்காக மாணவர்களை தேர்ந்தெடுத்து, ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் பணியில் சேர்வதற்கான ஆணைகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது, 'அமேசான் இந்தியா' நிறுவனம்.

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட, இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து, வளாக நேர்காணல் வாயிலாக, மாணவர்களை பணிக்காக அமேசான் இந்தியா நிறுவனம் தேர்வு செய்து இருந்தது. ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், இதுநாள் வரை, அவர்களுக்கு பணி நியமனம் குறித்த ஆணைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சவாலான பொருளாதார நிலைமைகள் காரணமாக, மாணவர்களுக்கு பணி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, 'அமேசான் இந்தியா' தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: சவாலான பொருளாதார நிலைமைகள் காரணமாக, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி வழங்குவதில் ஆறு மாத காலமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்புகள் எதுவும் இருக்குமானால் அதற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.
Latest Tamil News
நிறுவனம், அதன் தலைமைப் பணிகளுக்கும், நிறுவனத்தை கட்டமைக்கவும், கல்லுாரி வளாக நேர்காணல் வாயிலாக, அடுத்த தலைமுறையினரை தேர்ந்தெடுப்பதில் உறுதியுடன் உள்ளது. இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

அமேசானின் இந்த தாமதத்தால், வேலைக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஐ.ஐ.டி., பட்டதாரிகள், தங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடாமல் இருப்பதற்கான அடுத்தக்கட்ட முயற்சிகளில் இறங்கி உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில், அமேசான் நிறுவனம், கூடுதலாக 9 ஆயிரம் பேர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. ஐ.ஐ.டி., பட்டதாரிகள், எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான அடுத்தக்கட்ட முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.


வாசகர் கருத்து (9)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் இரண்டு கோடிப் பேரும் வேலைக்குத் தயாரா இருந்தாங்க ,இன்னும் இருக்காங்க ,இன்னும் இருப்பாங்க....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Pakkoda Specialists will Definitely going to raise in India....

    • ஆக .. - Chennai ,இந்தியா

      ஹல்திராம் பிகானீர் புஜியா அடையாரு ஆனந்த பவன் இவர்களெல்லாம் பகோடா போட்டு தான் சாம்ராஜ்யம் நிலை நாட்டினர்.

  • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

    சில மாநிலங்களில் (தமிழகம் உள்பட) தேர்வாணையம் தேர்வினை நடத்தி பல மாதங்கள், ஆண்டுகள் முடிந்த பின்னும், உரிய பேரம் முடியாததால், தேர்வுகளின் முடிவை வெளியிடாமல் காலம் தாமதம் செய்வதும், சில நிகழ்வில் தேர்வு முடிவினையே ரத்து செய்வதும் நடக்கிறது. அப்படியிருக்கும்போது, அமேசான் நிறுவனம் ஆறு மாதம் காலதாமதம் செய்துள்ளதை ஒரு பெரிய செய்தி போல வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    செயற்கை நுண்ணறிவு என்கிற AI தொன்னூறு சதவிகித பணியாட்களை காலி செய்துவிடும்

    • அப்புசாமி - ,

      செயற்கை நுண்ணறிவு பக்கோடா போடுமா? பானிபூரி செஞ்சு தருமா?

  • mindum vasantham - madurai,இந்தியா

    Arasu niruvana velai than paathukappanathu

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்