துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நிறுவப்பட உள்ள முதல் ஹிந்து கோவிலின் கட்டுமானப் பணிகளை, 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துாதர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
கலைநயம்
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், சுவாமி நாராயணன் கோவிலுக்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏறத்தாழ 55 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோவிலில், கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த துாதரக அதிகாரிகள் இக்கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர்.
சிற்ப வேலைப்பாடு
இங்கு நடைபெறும் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த இவர்கள், கலைநயத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சிற்ப வேலைப்பாடுகளை பார்த்து ரசித்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடனும் கலந்துரையாடிய துாதரக அதிகாரிகள், தங்களுக்கு எழுந்த சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.
வாசகர் கருத்து (4)
ஒரு இஸ்லாமிய நாட்டில் மாபெரும் ஹிந்து கோவில் உருவாகிறது. ஆனால், இந்து இந்தியாவில், ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன
அரபிகளிடையே கூட மாற்றம். ஆனால் வாளுக்குப்பயந்து மதம் மாறியவர்கள்தான் ஓவராக ஆடுகிறார்கள்.
வாளுக்கு பயந்து மதம் மாறியவர்களை விட வாய்ப்புக்கு மதம் மாறிய திலிப் ரகுமான் ஒடுக்கப்படவேண்டும்.
யப்பா, அரேபியர்கள் ஒரிஜினல் இஸ்லாமியர்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் மதத்தை மதிக்க தெரியும்.