Load Image
Advertisement

தி.மு.க., வன்முறை கட்சி என்று மீண்டும் நிரூபித்துள்ளது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை-“வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதன் மூலம், தி.மு.க., வன்முறை கட்சி தான் என மீண்டும் நிரூபித்துள்ளது,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தெரிவித்தார்.
Latest Tamil News

மதுரையில் அவர் கூறியதாவது:

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையோர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மிக தாமதமாக நடக்கிறது. முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராய, போலி மதுவால் ஏற்பட்ட மரணங்கள் நடந்திருக்காது.

சோதனைக்கு வந்த ஐ.டி., அதிகாரிகளை தாக்கியதன் மூலம் தி.மு.க., வன்முறை கட்சி தான் என்பதை மீண்டும் காட்டுகிறது.

தமிழக போலீஸ் டி.ஜி.பி., சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அவருடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. அவரை சுதந்திரமாக செயல்பட விட்டிருந்தால் தமிழகத்தில் மதுவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் நடந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாசன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம், காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், த.மா.கா., தலைவர் வாசன் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வருமான வரி சோதனை என்பது அந்த துறையின் தனிப்பட்ட முடிவு. ஊழல், லஞ்சம் என்ற ரீதியில் ஆதாரத்தின் அடிப்படையில்தான் சோதனை நடக்கிறது.

உண்மை நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆள் பலம் - அதிகார பலத்தை பயன்படுத்தி அதிகாரிகளை தாக்குவதற்கும் அவர்களை அடிபணிய வைப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
Latest Tamil News
தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தவறு இருந்தால் இதுபோல் சோதனை நடப்பது வழக்கமானது. அதிகாரிகள் தங்கள் கடமையை செயல்படுத்தும்போது அச்சுறுத்தல் கூடாது.

இதன் மூலம், ஆள் பலம், அதிகார பலம், பண பலம் வெளிப்பட்டு வருகிறது. உண்மை நிலையை பொதுமக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் உள்ளனர்.

இவ்வாறு வாசன் கூறினார்.


வாசகர் கருத்து (12)

  • vbs manian - hyderabad,இந்தியா

    வன்முறை கழகத்தின் மறுபக்கம்.

  • DVRR - Kolkata,இந்தியா

    சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் - பழ மொழி. வன்முறை கட்சி என்று தானே நேராக அர்த்தம் வருகின்றது.

  • என்னதான் நடக்கும்? - marathahalli, bangalore,இந்தியா

    திராவிட முன்னேற்ற கழகம் என்று மாற்றிக்கொள்ளலாம்

  • Fastrack - Redmond,இந்தியா

    கரூரில் நேற்று நடந்த வன்முறைக்கு வருமான வரி துறை அதிகாரிகள் மீது FIR பதிவு செய்துள்ளது

    • s sambath kumar - chennai,இந்தியா

      இப்போ இருக்கிற திமுக போலீஸ் எப் ஐ ஆர் போடும்.

    • DVRR - Kolkata,இந்தியா

      திருட்டு திராவிட மடியல் அரசு போலீஸ் துறை என்று அலுவலக பெயர் மாற்றம் அப்படித்தானே அடிமை போலீஸ் இருக்கும்

  • vinu - frankfurt,ஜெர்மனி

    நீங்கள் விஞ்ஞான கட்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்