ரத்த வங்கிகளில் ரத்தம் தட்டுப்பாடு சிசேரியன் பிரசவங்களுக்கு சிக்கல்
கம்பம் : தேனி மாவட்டத்தில் ரத்த வங்கிகளில் ரத்தம் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் அறுவை சிகிச்சைகள், சிசேரியன் பிரசவங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 யூனிட் கொள்ளளவு கொண்ட ரத்த வங்கி உள்ளது. பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனை, கம்பம், போடி அரசு மருத்துவமனைகளில் ரத்த வங்கி வசதி உள்ளன. இங்கு தலா 50 யூனிட்டுகள் வரை வைத்திருப்பார்கள்.
தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் கடும் ரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், திருவிழா நாட்கள் என்பதால் ரத்த கொடையாளர்கள் நேர்த்திக்கடனுக்காக கைகளில் கங்காணம் கட்டி விரதம் இருக்கின்றனர். எனவே ரத்தம் சேகரிப்பு முகாம்கள் நடத்த முடியவில்லை. இதனால் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அறுவை சிகிச்சைகள், சிசேரியன் பிரசவங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கம்பம் அரசு மருத்துவமனையில் சீமாங் சென்டரில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வெளியே வாங்கிவரச்சொல்லி உறவினர்களிடம் வலியுறுத்துகின்றனர். இதனால் சிக்கல் ஏற்படுகிறது.
இது குறித்து கம்பம் மருத்துவமனையில் விசாரித்த போது, ''மாவட்டம் முழுவதுமே ரத்தம் தட்டுப்பாடு உள்ளது. இப்போதைக்கு கொடையாளிகளை அவசரத்திற்கு அழைத்து சமாளித்து வருகிறோம். ரத்தம் சேகரிப்பு முகாம்கள் ஜூனில் நடத்திய பின்பே நிலைமை சீராகும்'' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!