ஜி.9, பச்சை வாழை விலையில் சரிவு செவ்வாழை, நாழிப்பூவன் நிதானம்
கம்பம் : ஜி.9 எனும் பச்சை வாழை விலையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. செவ்வாழை, நாழிப் பூவன் விலை ஏற்ற, இறக்கம் இன்றி நிதானமாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி பரப்பு 20 ஆயிரம் எக்டேரை தாண்டி உள்ளது. வாழைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நாழிப்பூவன், செவ்வாழை, நேந்திரன், ஜி.9, ரகங்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டாரங்களில் பெரும்பாலான வாழை சாகுபடி செய்கின்றனர். 10 நாட்களுக்கு முன்பு செவ்வாழை கிலோ ரூ.30, நாழிப் பூவன் ரூ.30 முதல் ரூ.35, நேந்திரன் ரூ.30 என்ற விலையில் இருந்தது. ஜி. 9 எனும் பச்சை வாழை கிலோ ரூ.14 வரை கிடைத்தது. தற்போது ஜி.9 வாழை கிலோ ரூ.9 முதல் 12 வரை கிடைக்கிறது. விலையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜி.9 ரகம் விலை குறைய என்ன காரணம் என தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ''மாம்பழ சீசனும் காரணமாக இருக்கலாம். ஆந்திராவில் இருந்து சென்னை மார்க்கெட்டிற்கு அதிக வரத்து உள்ளது. ஆனால் இன்னமும் இரண்டு வாரங்களில் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது'' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!