ADVERTISEMENT
பெரியகுளம் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் வாட்டர் ஆப்பிள் கோடைகாலத்தில் பெரியகுளம் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முந்திரி பழம் போல் தோற்றமுடைய வாட்டர் ஆப்பிள் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு மூன்று விதமான ருசிகளை கொண்டது. சர்க்கரை, ரத்த கொதிப்பினை சீராக வைத்திருக்கும் வாட்டர் ஆப்பிள் விற்பனை களை கட்டியுள்ளது.
வியாபாரி ராஜன் கூறுகையில்: ஒரு வாட்டர் ஆப்பிள் 70 கிராம் முதல் 100 கிராம் வரை இருக்கும். கிலோ ரூ.200 க்கு விற்கப்படுகிறது. தினமும் 30 முதல் 50 கிலோ வரை விற்பனையாகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!