ADVERTISEMENT
போடி : போடி அருகே கோடங்கிபட்டி பழைய ரைஸ் மில் தெருவிலிருந்து கணக்கன்குளம் கண்மாய் கரையோரம் கருப்பசாமி கோயில் வரை ரோடு வசதியின்றி முட்புதர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோடங்கிபட்டி ஊராட்சி, கணக்கன்குளம் கண்மாய் சுற்றி 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. கரும்பு, தென்னை, சோளம் உள்ளிட்ட பலவகை விவசாயம் செய்கின்றனர். பழைய ரைஸ் மில் தெருவிலிருந்து கணக்கன்குளம் கண்மாய் கரையோரம் வழியாக கருப்பசாமி கோயில் வரை ரோடுக்கான பாதை உள்ளது. விளை பொருட்களை விவசாயிகள் இப்பாதை வழியாக கொண்டு வருவது வழக்கம். தற்போது பாதையின் இருபுறமும் முட்புதர் ஆக்கிரமிப்பால் பாதை குறுகி ரோடு வசதி இல்லாமலும், கரையோரம் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் டூவீலர். டிராக்டர் மூலம் விளை பொருட்களை கொண்டு வர முடியாமல் தலைச் சுமையாக கொண்டு வந்து சிரமம் அடைந்து வருகின்றனர். கண்மாய் கரையை ஒட்டி தடுப்பு சுவர் அமைத்து இருபுறமும் உள்ள முட்புதர் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு வசதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!