மனைவிக்கு துன்பம் கணவர் மீது வழக்கு
தேனி : மனைவியை பிறருடன் ஒப்பிட்டு தவறாக பேசி கொடுமை செய்த கணவர் கணேசன் 43, மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் விசாரிக்கின்றனர்.
தேனி அரண்மனைப்புதுார் வசந்தம் நகர் முருகேஸ்வரி 39. இவரது கணவர் ஆட்டோ டிரைவர் கணேசன். இருவருக்கும் 2003ல் திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் ஆட்டோ டிரைவர் மது குடித்து, பல பெண்களிடம் தவறாக பழகியது மனைவிக்கு தெரிந்தது.
இதனால் மதுகுடித்து வந்து தினமும் கொடுமைப்படுத்திய கணவர், மனைவியின் பீரோவில் இருந்த சேலைக்குள் 'காண்டம்' பாக்கெட்டுகளை ஒளித்து வைத்து, மனைவியை பிறருடன் ஒப்பிட்டு தவறாக பேசி உள்ளார். வங்கியில் அடமானம் வைத்த 22 பவுன் நகைகளை மனைவிக்கு தெரியாமல் மீட்டு செலவு செய்துள்ளார். மனைவி புகாரில், கணேசன் மீது, தேனி அனைத்து மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!