போலீஸ் செய்தி
மூதாட்டியிடம் நகை திருட்டு
போடி: மீனாட்சிபுரத்தில் வசிப்பவர் கலாவதி 70. இவரது வீடு நேற்று முன் தினம் இரவு திறந்து இருந்த போது அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர் வீட்டுக்குள் சென்று பதுங்கி உள்ளார். பதுங்கிய சம்பவம் தெரியாத நிலையில் கலாவதி வீட்டை உள் பக்கமாக பூட்டி விட்டு கழுத்தில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் செயின்யை கழற்றி அருகே வைத்து தூங்கியுள்ளார். அருகே வைத்திருந்த தங்க செயின், பீரோவில் இருந்த ரூ. 4 ஆயிரத்தை திருடி செல்ல முயன்றார். திருடிய நபரை பார்த்து கலாவதி சத்தம் போட்டதும் செயின், பணத்துடன் தப்பி ஓடி விட்டார். போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தந்தை உடல் எரிப்பு:மகன் மீது வழக்கு
போடி: ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 65. இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பழனிச்சாமி இறந்ததை மகன் சுரேஷ் 40, போலீஸ்க்கு தெரிவிக்காமல் உடலை உறவினர்கள் உதவியோடு ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மயானத்தில் எரித்துள்ளார். பொட்டிப்புரம் வி.ஏ.ஓ., பால்பாண்டி புகாரில் போடி தாலுகா போலீசார் சுரேஷ் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாகனம் மோதி குழந்தை காயம்
போடி: -மூணாறு அருகே சொக்கநாடு எஸ்டேட்டில் வசிப்பவர் பாலமுருகன் 42. இவர் நேற்று மூணாறில் இருந்து போடிக்கு காரில் வந்துள்ளார். போடிமெட்டு மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த போது, நாகப்பட்டினம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்த செல்வம் 42, என்பவர் வாகனத்தில் வேகமாக வந்ததில் கார் மீது மோதியது. இதில் பாலமுருகனின் 2 மாத குழந்தையின் நெற்றியில் கார் கண்ணாடி துகள்கள் பட்டதில் காயம் அடைந்தார். குரங்கணி போலீசார் செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
எம்.சாண்ட் கடத்தல்: இரு லாரிகள் பறிமுதல்
கம்பம்:- தேனி மாவட்டத்திலிருந்து கம்பமெட்டு வழியாக இரவில் கனிம வளங்கள் உரிய அனுமதி சீட்டு இன்றி கடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை கனிமவள உதவி இயக்குனர் வினோத் தலைமையில் கம்பமெட்டு மலைப்பாதையில் சோதனை நடத்தினர். அப்போது இரு டிப்பர் லாரிகளில் அனுமதி சீட்டு இன்றி கேரளாவிற்கு எம். சாண்ட், ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. லாரி டிரைவர்களும் தப்பி ஓடினர். இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த உதவி இயக்குனர் போலீசில் ஒப்படைத்தார். வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்: 10 பேர் மீது வழக்கு
போடி: அமராவதி நகரில் உள்ள கார்டமம் புரொடியூசர் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருபவர் குமரேசன் 68. கம்பெனியின் உரிமையாளர் பினாயி வர்கீஸ் என்பவருக்கும், தேவாரம் முத்து பச்சை குமார் என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று ஏலக்காய் ஏலம் நடந்து கொண்டிருந்த போது, முன் விரோதத்தை மனதில் வைத்து, முத்து பச்சை குமார் மற்றும் பெயர் தெரியாத 10 பேர் சேர்ந்து குமரேசனை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். போடி தாலுகா போலீசார் முத்து பச்சைக்குமார் உட்பட 10 பேரிடம் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!