பண மோசடி ஒருவர் மீது வழக்கு
போடி : போடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் 54 . இவர் மஹாராஷ்டிராவில் உமாண்புட்ரி என்ற பெயரில் ஏலக்காய் கம்பெனி நடத்தி வரும் ருட்சி பரீக் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ரூ.4.72 லட்சத்திற்கு ஏலக்காய் அனுப்பி உள்ளார்.
அனுப்பிய ஏலக்காய்க்கு ரூ.3.30 லட்சம் மட்டும் வழங்கினர். மீதம் ரூ.ஒரு லட்சத்தி 42 ஆயிரம் தராமல் இருந்துள்ளார். ருட்சி பரீக் மீண்டும் ஏலக்காய் கேட்டதன் பேரில் அந்த கம்பெனிக்கு 225 கிலோ ஏலக்காய் அனுப்பியுள்ளார். பல மாதங்களாகியும் பணம் தரவில்லை. அசோக்குமார் புகாரில் போடி டவுன் போலீசார் ருட்சி பரீக் மீது விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!