Load Image
Advertisement

மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்பு



தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் தேனி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்ட ராசிங்காபுரத்தை சேர்ந்த செந்தில்முருகன் பதவி ஏற்பு விழா நடந்தது.

மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் பதவிபிரமாணம் செய்து வைத்தார். தி.மு.க., வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் கார்த்திகேயன்,செயல் அலுவலர்கள் மாரிமுத்து, தியாகராஜன், கார்த்திகேயன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநாயனார், தி.மு.க., ஒன்றியச் செயலாளர் ரத்தினசபாபதி, பேரூராட்சித் தலைவர் கீதா, பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு, வடக்கு மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் செல்லப்பாண்டியன், தி.மு.க., நகரச் செயலாளர்கள் நாராயணபாண்டியன், புருஷோத்தமன், ஒன்றியச் செயலாளர் முருகேசன், தேனி முன்னாள் நகரச் செயலாளர் பாலமுருகன், ஒப்பந்ததாரர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement