கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் 82.95 சதவீதம் தேர்ச்சி
மூணாறு : கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் 82.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கல்விதுறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று முன்தினம் வெளியிட்டார். தேர்வு எழுதிய 3,76,135 பேரில் 3,12,005 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 83.87 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 82.95 சதவீதமாக குறைந்தது. 77 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. 33,815 பேர் அனைத்து பாடங்களிலும் நூறு சதவீதம் மதிப்பெண் என்ற அடிப்படையில் 'ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.
தேர்ச்சி சதவீதத்தில் முந்திய இடுக்கி
இடுக்கி மாவட்டம் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் 8ம் இடத்தை பிடித்த நிலையில், இந்தாண்டு 5ம் இடத்தை பிடித்தது. மாவட்டத்தில் 80 பள்ளிகளைச் சேர்ந்த 10,181 பேர் தேர்வு எழுதினர். அதில் 8610 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 81.43 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 85.57 சதவீதமாக அதிகரித்தது. 1047 பேர் அனைத்து பாடங்களிலும் 'ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.
மூன்றாம் முறை நுாறு சதவீதம்
மூணாறில் உள்ள அரசு உண்டு, உறைவிட பள்ளியில் மலைவாழ் மக்கள் மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்களின் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் படிக்கின்றனர். இந்தாண்டு தேர்வு எழுதிய 42 பேரும் தேர்ச்சி பெற்று நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். பள்ளி துவங்கி 25 ஆண்டுகளில் மூன்றாம் முறையாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடதக்கது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!