குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
கூடலுார் : பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூடலுார் நகராட்சி கமிஷனர் காஞ்சனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமிஷனர் கூறும் போது:
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்யப்பட்டு கூடலுார் நகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மதுரை குடிநீர் திட்டத்திற்கு முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை மேற்கொள்வதற்காக அணையிலிருந்து தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை தற்போது லோயர்கேம்ப் நீர்த்தேக்க தொட்டியில் இருப்பில் உள்ள குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
அதனால் வீடுகளில் இருப்பு வைத்துள்ள குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!