ADVERTISEMENT
தேனி : தேனி ஆயுதபடை மைதானத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வில் குறைபாடுகள் உள்ள 17 பஸ்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.
பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாமை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வகித்தார். ஆர்.டி.ஓ., செல்வக்குமார் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், டிரைவரும் உடல்நலமும்' என்ற தலைப்பில் பேசினார். ஏ.டி.எஸ்.பி., விகேகானந்தன், தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், டிராபிக் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி பேசினர்.
தேனி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.,க்கள் கட்டுப்பாட்டில் 710 பள்ளி வாகனங்கள் இயங்குகின்றன.
தேனி முகாமில் பங்கேற்ற 359 பஸ்களில் 17 பஸ்களில் முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்துகள், தீயணைப்பான், 'பிரேக்' திறன் குறைபாடு, டிரைவர் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பினர்.
குறைபாடுகளை சரி செய்து அடுத்த ஆய்வுக்கு உட்படுத்த அறிவுருத்தினர்.
பள்ளி பஸ்களை பாதுகாப்பாக ஓட்டிய தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பள்ளி டிரைவர்கள் 10 பேர், மேரிமாதா மெட்ரிக் பள்ளி டிரைவர்கள் 5 பேர், தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி டிரைவர்கள் 3 பேர், கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி டிரைவர்கள் இருவர், சாந்திநிகேசன் பப்ளிக் பள்ளி டிரைவர்கள் ஐந்து பேர், வேலம்மாள் பள்ளி டிரைவர்கள் 5 பேர் என சிறப்பாக பணி செய்த 30 டிரைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
15 டிரைவர்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை பெற்றனர். அலுவலக கண்காணிப்பாளர் மதிவாணன் நன்றி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!