ADVERTISEMENT
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் உடையாழி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சென்னமராஜ், ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட ஊழியர்கள், உதவியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் தேன்மொழி, சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் கிருபாவதி பேசினர். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கமீனாள், முன்னாள் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னச்சாமி பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!