லாட்ஜ், ஓட்டல் கட்டணம் அதிகரிப்பு வரைமுறைப்படுத்த ஆலோசனை கூட்டம்
மூணாறு : மூணாறில் தங்கும் விடுதி, ஓட்டல் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் வகையிலான கட்டண உயர்வை வரைமுறைபடுத்த போலீசார், ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தனர்.
மூணாறில் தங்கும் விடுதி, ஓட்டல் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அவற்றில் கட்டணத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என நிபந்தனை உள்ளது. அதனை நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள தங்கும் விடுதி, ஓட்டல் ஆகியவை மட்டும் பின்பற்றுகின்றன. மீதமுள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் தன்னிச்சையாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக கோடை சுற்றுலா சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிக்கும் வகையில் சில தங்கும் விடுதிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக ரூ. ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட அறைகளுக்கு ரூ.8 ஆயிரம் வரை வசூலித்து கொள்ளை லாபம் அடைந்தனர்.
அதே போல் ஓட்டல்களிலும் அதிக கட்டணம் வசூலிப்பதுடன், சில ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் காலனி செல்லும் ரோட்டில் உள்ள ஓட்டலில் தரமற்ற உணவு அருந்திய கண்ணூரைச் சேர்ந்த 9 பயணிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
தங்கும் விடுதி, ஓட்டல் ஆகியவற்றில் கட்டணங்களை வரைமுறைபடுத்தவும், சுகாதாரமான முறையில் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாகவும், சம்பந்தப்பட்ட அமைப்பினருடன் போலீசார், ஊராட்சி நிர்வாகம் ஆகியோர் சார்பில் நாளை மறுநாள் (மே 29) ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!