Load Image
Advertisement

செங்கோல் வரலாறு என்ன? ஆதீனகர்த்தர் விளக்கம்

What is the history of Scepter? Description of the originator    செங்கோல் வரலாறு என்ன? ஆதீனகர்த்தர் விளக்கம்
ADVERTISEMENT
சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் கிளை மடத்தில், ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் நேற்று அளித்த பேட்டி:

சைவ சமயத்தில் நந்தி என்பது, தர்மத்தின் அடையாளம். தர்மம் அழிந்தால் உலகம் அழியும். அதனால், தர்மத்தை அரசன் காக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த, செங்கோலில் நந்தி வைக்கிறோம்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீனத்தை ராஜாஜி தொடர்பு கொண்டு, 'முறைப்படி செங்கோல் வழங்க வேண்டும்' எனக் கேட்டார். இதன்படி, சென்னை உம்மிடி பங்காரு நகைக் கடையில், 5 அடி உயரத்தில் தங்க முலாம் பூசிய செங்கோல் செய்யப்பட்டு, 1947 ஆகஸ்ட் 14ம் தேதி இரவு 11:45 மணிக்கு மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டது.

அவரிடம் இருந்து செங்கோலை வாங்கி ஊர்வலமாக எடுத்துச் சென்று, அன்றைய பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஆதீனத்தின் சார்பில், குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

ஆதீனம் வெளியிட்டுள்ள பல நுால்களில், செங்கோல் வழங்கிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது; இதற்கான ஆதாரங்களும் உள்ளன.

தமிழகத்தில் அதுவும் சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து, பிரதமருக்கு செங்கோல் வழங்கிய சம்பவம் அனைவரும் பெருமை கொள்ளத்தக்க நிகழ்ச்சி. ஆனால், இன்று சிலர், நேருவிடம் செங்கோல் வழங்கப்படவில்லை என, சர்ச்சைக்குரிய தகவல்களைக் கூறி வருவது வருந்தத்தக்கது.

சோழர்கள் நடத்திய ஆட்சி முறைப்படி தான் செங்கோலை உருவாக்கி, நேருவிடம் கொடுத்தோம். 'கோல் உயர கோன் உயரும்' என, அவ்வையாரும் கூறியுள்ளார். 'சமன் செய்து சீர்துாக்கும் கோல்போல்' என, வள்ளுவரும் கூறியுள்ளார். கடந்த 75 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட செங்கோலை புதுப்பித்து, மீண்டும் பிரதமர் மோடியி டம் ஒப்படைக்க உள்ளோம்.

பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கை அருகில், அந்த செங்கோல் வைக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது, மகிழ்ச்சி தருகிறது என்றார்.


வாசகர் கருத்து (1)

  • M. Sivaprakash - Vellore,இந்தியா

    இது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சி. சர்ச்சைகளை எழுப்பாமல் மகிழ்ச்சியை தெரிவிப்பது நல்லது. வாழ்க தமிழ், வாழ்க இந்தியா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement