ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு
தேனி : தேனி அருகே லட்சுமி புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பதிவுறு எழுத்தராக பணிபுரிபவர் காதர்முகமது 35. இவர் நேற்று மாலை பெரியகுளத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார்.
அங்கு யாரோ விட்டுச் சென்ற ரூ.10 ஆயிரம் இருந்தது.
அதனை எடுத்த காதர் முகமது, பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார். நீதிமன்ற ஊழியரின் நேர்மையை வங்கி மேலாளர், பணியாளர்கள் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!