குறுவைக்கு 66.5 டன் விதைநெல் தயார்
தேனி : தேனி மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு 66.5 டன் நெல் விதைகள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனுார், தேனி, உத்தமபாளையம் ஒன்றியங்களில் குறுவை சாகுபடி ஜூன் 1ல் துவங்குகிறது. குறுவை சாகுபடி காலத்தில் இந்த ஒன்றியங்களில் சராசரியாக 5100 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவாயிகளுக்கு கோ.51 ரகம் 5.5 டன், ஆர்.என்.ஆர்., ரகம் 50 டன், என்.எல்.ஆர்.,ரகம் 12 டன் என மொத்தம் 66.5 டன் நெல் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நெல் விதைகள் மானியத்தில் கிலோ ரூ.17.50க்கு வழங்கப்படும். இதுவரை 25டன் நெல் விதைகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. 5 ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!