Load Image
Advertisement

தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்ற சாராய வியாபாரிகள்!

The liquor dealers who mixed methanol and sold it due to business competition!   தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்ற சாராய வியாபாரிகள்!
ADVERTISEMENT
விழுப்புரம் : மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் தொழில் போட்டி காரணமாகவே, விஷத்தன்மை வாய்ந்த மெத் தனாலை கலந்து விற்றது சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் கள்ளச்சாராய கொலை வழக்கில், மரக்காணம் சாராய வியாபாரிகள் அமரன், புதுச்சேரி ஏழுமலை, சென்னை கெமிக்கல் பேக்டரி உரிமையாளர் இளையநம்பி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்னர். இவர்களை ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த 24ம் தேதி காவலில் எடுத்து, 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சென்னையைச் சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை அதிபரான இளையநம்பி, தொழிற்சாலை மூடப்பட்டதால், அவரிடம் தேங்கியிருந்த மெத்தனால் என்ற விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருளை, புதுச்சேரியைச் சேர்ந்த சாராய வியாபாரியான ஏழுமலையிடம் விற்பனைக்கு அனுப்பியுள்ளார்.

6 பேரல் மெத்தனாலை வாங்கிய, ஏழுமலை, புதுச்சேரியைச் சேர்ந்த பர்கத்துல்லா மூலம் மரக்காணம் சாராய வியாபாரிகளான அமரன், முத்து உள்ளிட்டோருக்கு குறைந்த விலைக்கு, 200 லிட்டர் விற்றுள்ளார்.

வழக்கமாக புதுச்சேரி கள்ளச்சாராயத்தை வாங்கி பாக்கெட் செய்து விற்பனை செய்து வந்த மரக்காணம் சாராய வியாபாரிகள், தொழில் போட்டி காரணமாக, அதிகம் போதை தரும் என்பதால், சாராயத்துடன் மெத்தனால், சேர்த்து, கடந்த 13ம் தேதி மாலை விற்பனை செய்துள்ளனர். இதனால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், 6 பேரல்களில், 2 பேரல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 4 பேரல் மெத்தனாலை, மீண்டும் சென்னைக்கு அனுப்பி உள்ளதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 12வது நபரான மதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து (6)

  • sankar - Nellai,இந்தியா

    விடியல் ஆட்சியில் போட்டி போட்டு வளரும் சிறு குறு தொழில்கள் - சூப்பர்

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    யார்?

  • ஆரூர் ரங் -

    அடுத்த தேர்வாணையத் தேர்வில் கேள்வி. சாராயத்தில் எது உடலுக்கு🤔 நல்லது? 1. விஷச்சாராயம் 2 கள்ளச்சாராயம் 3 டாஸ்மாக் சாராயம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    விற்றது மட்டுமல்ல. தங்களால் முடிந்த அளவில் பணம் போட்டு மில்லியடித்த 23 ஏழைகளையும் கொலையும் செய்தார்கள். தெரியாமல் இன்னும் எத்தனை பேரை கொன்றிருப்பார்களோ... சந்தேகமிருப்போர் அனைவரும் நீதிமன்றம் சென்று அரசிடம் நஷ்ட ஈடு, குடும்பத்திலுளோருக்கு அரசு வேலை போன்ற நிவாரணங்களை கேட்க வேண்டும்.

  • அப்புசாமி -

    இது வரை கைதான 11 பேரையும் தூக்கில் போடவும். அண்ணா பொறந்தார், பொரியார் பொறந்தார்னு விடுதலை செஞ்சா தி.மு.க ஆட்சிக்கே ஆப்பு வெச்சுருவானுக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement