ADVERTISEMENT
நெல்லிக்குப்பம்: கீழ்பட்டாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் மழுவேந்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 19ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி திரவுபதி அம்மன். அர்ஜூனன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரவுபதி அம்மன், அர்ஜூனன், பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, கணேசன் பூசாரி பூங்கரகத்துடன் முதலில் தீமிதித்தார். அவரை தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!