Load Image
Advertisement

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையினர் சாதனை

Achievement of Cuddalore District Home Guards    கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையினர் சாதனை
ADVERTISEMENT


கடலுார் : திருவண்ணாமலையில் நடந்த ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டியில், விழுப்புரம் சரக அணியினர் சாதனை படைத்தனர்.

தமிழ்நாடு ஊர்க்காவல் படை 28வது பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டி 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில், விழுப்புரம் சரக ஊர்க்காவல் படை சார்பில், கடலுார் மாவட்ட அணியினர் கைப்பந்து, கூட்டு கவாத்து, முதலுதவி போட்டிகள் மற்றும் அலங்கார அணி வகுப்பு ஆகியவற்றில் முதலிடம், கயிறு இழுத்தல் போட்டியில் (மகளிர்) இரண்டாம் இடம் பெற்றனர். மேலும், நீளம் தாண்டுதலில் ஊர்க்காவல் படை வீரர் தினகரன் முதலிடம் பெற்றார்.

கோப்பை வென்ற ஊர்க்காவல் படையினரை கடலுார் எஸ்.பி., ராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். விழுப்புரம் சரக உதவி தளபதி கேதார்நாதன், வட்டார தளபதி அம்ஜத்கான், துணை வட்டார தளபதி கலாவதி, கோட்ட தளபதி சிவப்பிரகாசம், உதவி படை தளபதிகள் கணபதி, வேதரத்தினம், மதியழகன், சுதர்சனம், வள்ளிமை உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement