ADVERTISEMENT
புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை வீடு தேடி சென்று சம்பத் எம்.எல்.ஏ., கை கடிகாரம் வழங்கி, பாராட்டினார்.
முதலியார்பேட்டை தொகுதியில் ஒரு அரசு பள்ளியும், மூன்று தனியார் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 20 மாணவர்களுக்கு வீடு தேடி சென்று சம்பத் எம்.எல்.ஏ., கை கடிகாரம் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளார்.
அவர்களில் இதுவரை 8 மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!