ADVERTISEMENT
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வடக்குமெயின்ரோட்டில் துவங்கி குறுக்கு ரோடு பின்னலுார் வரையிலான சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
சென்னை - கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு ராஜிவ் சிலை அருகே வடக்கு மெயின்ரோடு துவங்கி, சர்க்கரை ஆலை, குறுக்கு ரோடு, பின்னலுார் வரை சாலையில் ஆங்காங்கே மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளன. ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து சாலை நெடுகிலும் சிதறிக் கிடக்கின்றன.
இரவு நேரங்களில் இந்த சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மெகா சைஸ் பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன.
மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்களில் சிக்கி, காயமடைகின்றனர்.
தற்போது தஞ்சாவூர் - விக்கிரவாண்டி பைபாஸ் சாலைப் பணிகள் நடந்து வருகிறது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை சீரமைப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
எனவே, சேதமடைந்துள்ள சேத்தியாத்தோப்பு வடக்குமெயின்ரோட்டில் துவங்கி குறுக்கு ரோடு பின்னலுார் வரையிலான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!