அரசு மருத்துவ கல்லூரி விவகாரம்; கவர்னருக்கு மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி,: அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்திருப்பது துரதிஷ்டவசமானது. இது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைகளை காலத்தோடு நிவர்த்தி செய்யாதது, மருத்துவ கல்லுாரி அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.
மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் செயல்படவேண்டும்.
முதல்வர் ரங்கசாமி, நீட் தேர்வு முடிவுகள் வருவதற்குள் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு பெறவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!