தமிழ்மாணி விருதுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை
புதுச்சேரி : தமிழ்மாமணி விருதுகளுக்கான விண்ணப்பத்தை சமர்பிக்க காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என சிந்தனையாளர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேரவை தலைவர் செல்வம், முதல்வரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசு தமிழ்மாமணி விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இதற்கிடையே, தமிழ்மாமணி விருதுகளுக்கான விண்ணப்பத்தை கலை பண்பாட்டுத்துறையில் வரும் 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்பதை, கூடுதலாக 15 நாட்கள் நீட்டிப்பு செய்திட வேண்டும்.
இவ்விருதுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும் என்றால், அவை குறித்து மிகதெளிவாக அறிவிக்க வேண்டும். காரணம், அண்மையில் வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் தகுதிகள் இருந்தும் பலருக்கு வழங்கப்படவில்லை.
எனவே, சரியான தகுதிகளை அறிவித்து அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!