காரைக்கால் பெண் தாதா மாவட்டத்திற்குள் நுழைய தடை
காரைக்கால் : மாஜி சபாநாயகர் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதா உள்ளிட்ட இருவர் காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தாதா எழிலரசி,45; மற்றும் அவரது கூட்டாளி விக்ரமன்,44; ஆகியோர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
இவர்கள் மாவட்டத்தில் இருந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அதனையொட்டி, இவர்களை ஊருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டி எஸ்.பி., சுப்ரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.
அதனையேற்று துணை கலெக்டர் ஜான்சன், பெண் தாதா எழிலரசி, அவரது கூட்டாளி விக்ரமன் ஆகியோர் 2 மாதம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!