மனைவி மாயம் கணவர் புகார்
புதுச்சேரி : புதுச்சேரி லுாயிபிரகாசம் வீதியை சேர்ந்தவர் வசந்தராஜா. மதுக்கடை உரிமையாளர். இவரது மனைவி பவித்ரா,25; இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் துணிகள் வாங்கி நேரு வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வசந்தராஜா அளித்த புகாரின் பேரில் பெரியக் கடை போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன பவித்ராவை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!