ADVERTISEMENT
புதுச்சேரி : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த குளூனி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை குளூனி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவிகள் மோனிகா, நிவேதா தாஸ் ஆகியோர் 500க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவிகள் வைஷ்ணவி, எம்.,வைஷ்ணவி ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், சத்தி ரித்திகா, ஆர்த்தி ஆகியோர் 491 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை, முதல்வர் ரோசலின்மேரி சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!