Load Image
Advertisement

காற்றுடன் கன மழை: மின்சாரம் துண்டிப்பு

Heavy rain with wind: Power outage    காற்றுடன் கன மழை: மின்சாரம் துண்டிப்பு
ADVERTISEMENT
வடலுார்: குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கடந்த 4ம் தேதி துவங்கிய அக்கினி நட்சத்திரம் காரணமாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர். முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றி உள்ள பகுதியில் நேற்று மதியம் 2:30 மணியளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.

சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த இந்த கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால், குறிஞ்சிப்பாடி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால், நகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மின் ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தி, மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement