Load Image
Advertisement

குழந்தை இறந்ததால் உறவினர்கள் ஆவேசம்



புதுச்சேரி : புதுச்சேரி, காலாப்பட்டு பெருமாள் நகரை சேர்ந்தவர் பாண்டியன்,31; தனியார் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி,27; இவர்களுக்கு 6 மற்றும் ஒன்றரை வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த ஜெயலட்சுமிக்கு, 7 மாதத்திலேயே பிரசவ வலி ஏற்படவே, அவரை காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று மதியம் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்தது.

இதனால், ஆத்திரமடைந்த பாண்டியனின் உறவினர்கள், மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பாண்டியன் கூறுகையில், கர்ப்பமடைந்த எனது மனைவியை பரிசோதனைக்காக கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். வயிற்றில் உள்ள குழந்தையின் தொப்புள் கொடியில் ரத்தம் கட்டியுள்ளதாகவும், அதனை அகற்ற உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். அதற்காக ரூ.8 லட்சம் வரை பணம் கட்டியுள்ளேன்.

குழந்தை நன்றாக இருப்பதாக கூறிய டாக்டர்கள் இன்று குழந்தை பிறந்ததும் இறந்துவிட்டதாக கூறுகின்றனர் என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement